/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
வண்டிப்பாளையம் கோவிலில் 28ம் தேதி தீமிதி திருவிழா
/
வண்டிப்பாளையம் கோவிலில் 28ம் தேதி தீமிதி திருவிழா
ADDED : ஜூன் 02, 2024 04:39 AM
கடலுார்: பழைய வண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவில் தீமிதி பிரம்மோற்சவ விழா வரும் 11ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்குகிறது.
கடலுார், பழையவண்டிப்பாளையம் திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா வரும் 28ம் தேதி நடக்கிறது.
விழா வரும் 11ம் தேதி மாலை கொடியேற்றத்துடன் துவங்குகிறது. தொடர்ந்து தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் இரவில் மகாபாரதம் கதா கலட்சோபம் நடக்கிறது.
25ம் தேதி மாலை பக்காசூரனுக்கு சோறு போடுதலும், 26ம் தேதி மாலை அர்ச்சுனர் வில் வளைத்தல் மற்றும் திரவுபதி-அரச்சுனர் திருக்கல்யாணம் நடக்கிறது. இரவு மணக்கோலத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. மறுநாள் 27ம் தேதி கரக உற்சவத்தில் அம்மன் -அர்ச்சுனர் வீதியுலா மற்றும் சக்தி கரகம் வீதியுலா நடக்கிறது.
வரும் 28ம் தேதி தீமிதி உற்சவத்தையொட்டி அன்று காலை மாடு விரட்டுதல், படுகளத்தை தொடர்ந்து மாலை தீமிதி உற்சவம் நடக்கிறது. இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.
29ம் தேதி காலை 108 பால்குடம் ஊர்வலமும், மாலை தர்மர் பட்டாபிஷேகம் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது. ஜூலை 5ம் தேதி போத்துராஜா உற்சவம் மற்றும் முத்தால் ராவுத்தர் படையல் நடக்கிறது.