ADDED : ஜூலை 21, 2024 06:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அடுத்த எழுமேடு மன்னார்சுவாமி, பச்சைவாழியம்மன் கோவிலில் 25ம் ஆண்டு தீமிதி திருவிழா நடந்தது.
விழா கடந்த 12 ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் காலை சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள், திருக்கல்யாணம் உற்சவம் நடந்தது. வள்ளி தேவசேனா சமேத சுப்பரமணியர் திருக்கல்யாண அலங்காரத்துடன் வீதியுலா நடந்தது.
மாலை 6:10 மணிக்கு தீமிதி திருவிழா நடந்தது. நுாற்றுக்கணக்கான பக்தர்கள் வேண்டுதலின்பேரில் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பொதுமக்கள் பங்கேற்றனர்.
ஏற்பாடுகளை ஆலய அறங்காவலர் இதயரசு மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தார்.