ADDED : ஆக 05, 2026 03:43 PM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு, ஆக. 6–ஆணைவாரியில் அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறப்பு விழா நடந்தது.
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள ஆணைவாரி, நெல்லிக்கொல்லை, துறிஞ்சிக்கொல்லை, பெரியகுப்பம், சின்னகுப்பம் உள்ளிட்ட கிராமங்களில் குறுவை நெல் அறுவடை பணி துவங்கி நடைபெற்று வருகிறது
அதனையொட்டி, அறுவடை செய்யப்படும் நெல்லை விற்க அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க வேண்டி, விவசாயிகள் கலெக்டரிடம் மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து கலெக்டர் உத்தரவை தொடர்ந்து, தமிழ்நாடு வாணிப கழக சிதம்பரம் மண்டல அதிகாரிகளின் வழிகாட்டுதலின் பேரில், ஆணைவாரி கிராமத்தில் நேற்று நேரடி கொள்முதல் நிலையம் துவங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கொள்முதல் நிலைய பட்டியல் எழுத்தர், உதவியாளர், விவசாயிகள், மூட்டை பிடிக்கும் தொழிலாளர்கள் உடனிருந்தனர்.
