/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
/
மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூலை 25, 2024 11:40 PM
விருத்தாசலம்: விருத்தாசலம் ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டம் நடந்தது.
கூட்டத்திற்கு, ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் தலைமை தாங்கி, மனுக்களை பெற்றார். ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் செல்வமணி, சமூக நல தாசில்தார் செந்தில்குமார் முன்னிலை வகித்தனர்.
இதில் விருத்தாசலம், திட்டக்குடி, வேப்பூர், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு, வேலைவாய்ப்பு உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளின் நலத்திட்டங்கள் கேட்டு மனு அளித்தனர்.
இதில், அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்க மாநில குழு உறுப்பினர் ரவீந்திரன், விருத்தாசலம் வட்ட செயலாளர் சாமிதுரை, தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் விமலா, வேப்பூர் வட்ட செயலாளர் சக்தி மற்றும் விருத்தாசலம் வேப்பூர், திட்டக்குடி, ஸ்ரீமுஷ்ணம் உள்ளிட்ட தாலுகாக்களை சேர்ந்த தாசில்தார், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், வி.ஏ.ஓ., க்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

