தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்

மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்


ADDED : ஜூலை 01, 2026 04:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 04:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை மாற்றக் கூடாது. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் கிராமப்புற மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை உறுதி செய்ய வேண்டும். கருவிழி பதிவு, கைரேகை பதிவு என்ற பெயரில் மாற்றுத்திறனாளிகளின் வேலைவாய்ப்பை பறிக்கக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் நேற்று அண்ணா பாலம் சிக்னல் அருகில் சட்ட நகல் கிழிப்பு போராட்டம் நடத்தினர். 

ஒன்றிய செயலாளர் வசந்தி தலைமை தாங்கினார். மாநகர செயலாளர் அப்துல் ஹமீது முன்னிலை வகித்தார். மாநில துணைத் தலைவர் ஆளவந்தார் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தொடர்ந்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கலைந்து சென்றனர்.  

விருதையில் போக்குவரத்து பாதிப்பு விருத்தாசலம் பாலக்கரை ரவுண்டானாவில், மாநிலக்குழு உறுப்பினர் ரவீந்திரன் தலைமையில் காலை 10:30 மணியளவில் கருப்பு கொடியேந்தி சாலை மறியல் போராட்டம் நடந்தது.

பழங்குடி மக்கள் சங்க மாவட்ட செயலாளர் அசோகன், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் கலைச்செல்வன், வட்ட நிர்வாகிகள் விமலா, அபிப்ரஹ்மான், கிருஷ்ணமூர்த்தி உட்பட, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அப்போது, மத்திய அரசையும், பிரதமர் மோடியை கண்டித்தும் கோஷமிடப்பட்டது. இன்ஸ்பெக்டர் பாபு தலைமையிலான போலீசார் அவர்களை சமாதானம் செய்து, கலைந்து போகச் செய்தனர். இதனால், பாலக்கரை ரவுண்டானாவில் 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதித்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us