ADDED : ஜூன் 02, 2026 05:41 PM

கடலுார்: கடலுார் பழைய கலெக்டர் அலுவலகம் முன்பு, மாற்றுத்திறனாளிகள் சங்கத்தினர் இலவச வீட்டுமனைப்பட்டா கேட்டு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிகரம் மாற்றுத்திறனாளிகளின் மாற்றுத்திற்கான சங்க சிறப்புத்தலைவர் குமார் தலைமை தாங்கினார். அ.ம.மு.க., மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர். தொடர்ந்து அவர்கள் கொடுத்த மனுவில், ‘மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப்பட்டா வழங்க வேண்டும் என 2018 முதல் போராடியதன் விளைவாக 2022ம் ஆண்டு 145 பேருக்கு பட்டா வழங்கப்பட்டது. ஆனால் இடத்தை அளந்து அத்து காட்டாமல் அதிகாரிகள் காலம் தாழ்த்தி வந்தனர். மாற்றுஇடம் தருகிறோம், கணினி பட்டா தருகிறோம் என அலைக்கழித்தனர். இப்பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும்,’ என தெரிவிக்கப்பட்டிருந்தது.
