/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ஆயதப்படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
/
ஆயதப்படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி
ADDED : செப் 06, 2024 12:08 AM

கடலுார் : சோனாங்குப்பம் கடற்கரையில், கடலூர் ஆயுதப்படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கடலுார் அடுத்த சோனாங்குப்பம் மீனவர் கிராம கடற்கரை பகுதியில் தேசிய பேரிடர் மீட்புக் குழு சார்பில் அயுதப்படை போலீசாருக்கு பேரிடர் மீட்பு பயிற்சி மற்றும் ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது. கடலுார் ஆயுதப்படையை சேர்ந்த 40 போலீசார் மற்றும் 20 பெண் போலீசாருக்கு தேசிய பேரிடர் மீட்டுக் குழுவினர் பயிற்சி அளித்தனர்.
புயல், மழை பேரிடர் காலங்களில் போலீசார் தங்களை எவ்வாறு தயார் படுத்திக்கொள்வது. பேரிடர் காலங்களில் கடலில் படகுகளை எப்படி இயக்குவது, கடலில் பாதிக்கப்பட்ட மீனவர் மற்றும் பொதுமக்களை எப்படி மீட்பது, மழை வெள்ள காலங்களில் கடலோர மக்களை காப்பாற்றுவது எப்படி. குறித்த பொதுமக்களிடையே போலீசாருக்கு செயல்விளக்கம் செய்து காண்பித்து பயிற்சி அளிக்கப்பட்டது.பயிற்சியை கடலூர் எஸ்.பி ராஜாராம் படகில் கடலுக்குள் சென்று பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். நிகழ்ச்சியில் டி.எஸ்.பி சவுமியா, ஆயுதப்படை இன்ஸ்பெக்டர் அருள்செல்வம், தேசிய பேரிடர் மீட்புக் குழு வீரர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.