/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மருங்கூர் அகழாய்வில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு
/
மருங்கூர் அகழாய்வில் வட்ட சில்லுகள் கண்டெடுப்பு
ADDED : ஜூலை 09, 2024 07:15 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி:கடலுார் மாவட்டம், பண்ருட்டி அருகே மருங்கூர் கிராமத்தில் அகழாய்வு செய்யப்படுகிறது. இதில், 10 அல்லது 11ம் நுாற்றாண்டை சேர்ந்த சோழர் கால செப்பு நாணயம் கடந்த 1ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து நடந்த அகழாய்வில் நேற்று, வட்ட சில்லுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த வட்ட சில்லுகள் பானை ஓடு வடிவில் பல்வேறு அளவுகளில் உள்ளன.
வட்ட சில்லுகள் கண்டறியப்பட்டுள்ளதன் வாயிலாக, தற்போது அகழாய்வு செய்யப்படும் இடம் வாழ்விட பகுதி தான் என்பதை உறுதி செய்கிறது என, அகழாய்வாளர்கள் தெரிவித்தனர்.