/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பழைய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு
/
பழைய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு
பழைய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு
பழைய ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைப்பு
ADDED : ஆக 27, 2024 04:15 AM

விருத்தாசலம், : விருத்தாசலம் சட்டசபை தொகுதியில் 15 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பெங்களூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விருத்தாசலம் கடலுார் சாலையில் உள்ள அரசு சேமிப்பு கிடங்கில், விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தொகுதிகளின் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த இரண்டு சட்டசபை தொகுதிகளிலும் கடந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் (2008 - 2009)ல் தயாரிக்கப்பட்ட ஓட்டுப்பதிவு இயந்திரங்களை பெங்களூரு பெல் நிறுவனத்திடம் ஒப்படைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.
அதன்பேரில், கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் ஆலோசனையின் பேரில், ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைக்கும் பணி நேற்று முன்தினம் நடந்தது.
மாவட்ட தேர்தல் தாசில்தார் சுரேஷ்குமார், துணை தாசில்தார் சிவகுமார், தேர்தல் உதவியாளர் ராஜேஷ், விருத்தாசலம் தாசில்தார் உதயகுமார், மாவட்ட கணினி மேலாளர் சாந்தப்பன், விருத்தாசலம் தேர்தல் துணை தாசில்தார் முருகேஸ்வரி, தேர்தல் பிரிவு கணினி இயக்குனர் சுரேஷ் மற்றும் தேசிய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்ற கட்சியினர் முன்னிலையில் குடோன் திறக்கப்பட்டு, கடந்த நகராட்சி மற்றும் பேரூராட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட 1,606 ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், 748 கட்டுபாட்டு கருவிகள் 3 லாரிகள் மூலம், பெங்களூரில் உள்ள பெல் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.