/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வழங்கல்
/
பிராமணர் சங்கம் பஞ்சாங்கம் வழங்கல்
UPDATED : மார் 22, 2024 12:15 PM
ADDED : மார் 22, 2024 12:15 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் கீழ்பட்டாம்பாக்கம் ஓசூரம்மன் கோவில் பிரம்மோற்சவத்தில், பிராமணர் சங்கம் சார்பில் பஞ்சாங்கம் வழங்கப்பட்டது.
கோவிலில், 10 நாள் பிரம்மோற்சவம் நடந்து வருகிறது. நேற்று 6ம் நாள் உற்சவத்தை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
அப்போது, நெல்லிக்குப்பம் கிளை பிராமணர் சங்கம் சார்பில் தமிழ் வருடம், குரோதி வருடத்துக்கான பஞ்சாங்கத்தை சங்க தலைவர் வெங்கட்ரமணராஜீ வழங்கினார்.
பொதுச் செயலாளர் ஜெயக்குமார். பொருளாளர் சேனாபதி குருக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இரவு யானை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடந்தது.

