/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்

ADDED : செப் 05, 2024 04:04 AM

மந்தாரக்குப்பம்: மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
லவன் ஸ்டார் கிரிக்கெட் கிளப் நடத்தும் 5 ம் ஆண்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டி மந்தாரக்குப்பம், வடலுார், வீணங்கேனி ஆகிய விளையாட்டு மைதானத்தில் கடந்த மாதம் 21 ம் தேதி துவங்கி நேற்று முன்தினம் வரை போட்டிகள் நடைபெற்றது. இதில் கடலுார், சிதம்பரம், பண்ருட்டி, விருத்தாசலம், நெய்வேலி டவுன்ஷிப் உள்ளிட்ட பல அணிகள் பங்கேற்றன. இதில் இறுதி போட்டியில் முதல் பரிசு டி.கே.ஸ்போர்ட்ஸ் அணியும், இரண்டாம் பரிசு லவன்ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணியும், மூன்றாம் பரிசு நெய்வேலி சூப்பர் கிங்ஸ் அணியும், நான்காம் பரிசு எமெர்ஜிங் நியூ ஸ்டார் அணியும் பெற்றது. நிகழ்ச்சியில் கிரிக்கெட் கிளப் நிர்வாகிகள் அருண், விஜி, ரவி, விஜய், ராஜூ, வெங்கட், பூபதி, வேல்முருகன், தமிழ்செல்வன், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.