/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கொத்தட்டை அரசு பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
/
கொத்தட்டை அரசு பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
கொத்தட்டை அரசு பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
கொத்தட்டை அரசு பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கல்
ADDED : ஜூலை 02, 2024 05:48 AM

பெண்ணாடம்: பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் 'தினமலர் - பட்டம்' இதழ் வழங்கப்பட்டது.
பள்ளி மாணவ, மாணவியரின் வாசிப்பு திறனை மேம்படுத்தவும், பொது அறிவு செய்திகள், நாட்டு நடப்புகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், விஞ்ஞான வளர்ச்சி, தற்போதுள்ள தொழில்நுட்ப அபிவிருத்திகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை மாணவர்களுக்கு எளிதில் புரியும் வகையில், 'தினமலர் - பட்டம்' இதழ் திங்கள் முதல் வெள்ளி வரை வெளியிடப்பட்டு வருகிறது.
அதன்படி, பெண்ணாடம் அடுத்த கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, பெண்ணாடம் அரிமா சங்கம் சார்பில், பட்டம் இதழ் வழங்கப்பட்டது.
சங்க தலைவர் சக்திவேல் தலைமை தாங்கினார். சாசன தலைவர் ஞானபிரகாசம், மாவட்ட தலைவர்கள் திருஞானசம்பந்தம், அருள்முருகன், கிருஷ்ணமூர்த்தி, ஆனந்தன், பாஸ்கரன், சங்க செயலர் சக்தி சபரீஷ், பொருளாளர் பாண்டியன் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுப்ரமணியன் வரவேற்றார். ஆசிரியர்கள் செல்வன், குமார், ஆனந்தராஜ், லட்சுமி, பவுசியாபேகம், கீர்த்தனா, மாணவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.