ADDED : ஜூலை 13, 2024 12:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: மா.கம்யூ, மாவட்டக்குழுக் கூட்டம் கடலுார் சூரப்பநாயக்கன்சாவடி கட்சி அலுவலகத்தில் நடந்தது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் உதயகுமார், மருதவாணன்,கருப்பையன், ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், தேன்மொழி, ராஜேஷ் கண்ணா பேசினர்.
கூட்டத்தில், மத்திய அரசு மூன்று குற்றவியல் சட்டங்களை திருத்தி அமல்படுத்தியதை கைவிட வேண்டும். நன்னடத்தை அடிப்படையில் கைதிகளை விடுவிக்கும் மாநில அரசுகளிள் உரிமையை பறிக்க கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை மாவட்டம் முழுதும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.