/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
அதிகாரிகள் கூட்டத்திற்கு வருவதில்லை மாவட்ட கவுன்சிலர்கள் புகார்
/
அதிகாரிகள் கூட்டத்திற்கு வருவதில்லை மாவட்ட கவுன்சிலர்கள் புகார்
அதிகாரிகள் கூட்டத்திற்கு வருவதில்லை மாவட்ட கவுன்சிலர்கள் புகார்
அதிகாரிகள் கூட்டத்திற்கு வருவதில்லை மாவட்ட கவுன்சிலர்கள் புகார்
ADDED : ஆக 08, 2024 11:43 PM

கடலுார்: கடலுார் மாவட்ட ஊராட்சி கூட்டத்திற்கு அதிகாரிகள் சரிவர வருவதில்லை என, கவுன்சிலர்கள் புகார் தெரிவித்தனர்.
கடலுார் மாவட்ட ஊராட்சிக்குழு கூட்டம், தலைவர் திருமாறன் தலைமையில் நேற்று நடந்தது. துணைத் தலைவர் ரிஸ்வானா பர்வீன், மாவட்ட ஊராட்சி செயலாளர் ஜோதி முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது:
முத்துக்கிருஷ்ணன் (பா.ம.க.,): தனது வார்டில் இதுவரை எந்த அடிப்படை வசதிகளும் செய்து கொடுக்கவில்லை. கூட்டத்திற்கு கலெக்டரை அழைக்க வேண்டும். அவர் வராததால் அதிகாரிகளும் கூட்டத்திற்கு சரிவர வருவதில்லை. இதனால், திட்டங்கள் நிறைவேற்ற முடியாத நிலை உள்ளது.
தமிழரசி (பா.ம.க.,) : திட்டக்குடி அரசு ஆண்கள் பள்ளி வளாகத்தில் விடுதி கட்டுவதற்குநடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பள்ளி விளையாட்டு மைதானத்தில் விடுதிகட்டுவதை தவிர்த்து, பள்ளியின் அருகில் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலுார் அரசு மருத்துவமனையில் இருதய நோய்க்கு சிகிச்சை அளிக்க டாக்டர் இல்லை. இருதய நோய் சிகிச்சைக்கு டாக்டர் நியமிக்க வேண்டும்.
கந்தசாமி (ம.தி.மு.க.,) குமாரக்குடி ரேஷன் கடை கட்டடம் சேதமடைந்து காணப்படுகிறது. புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
இதேபோன்று தங்கள் பகுதி குறைகள் மற்றும் கலெக்டர் மற்றும் அதிகாரிகளை கூட்டத்தில் பங்கேற்ற செய்ய வேண்டும் என, கவுன்சிலர்கள் பலரும் கோரிக்கை வைத்தனர்