ADDED : ஆக 24, 2024 06:31 AM

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் பள்ளியில், டேக்வாண்டோ கிளப் சார்பில் 5வது மாவட்ட அளவிலான போட்டி நடந்தது.
கடலுார் டேக்வாண்டோ கிளப் தலைவர் கிருஷ்ணகிஷோர் வரவேற்றார். மேயர் சுந்தரி ராஜா, மாநகர தி.மு.க., செயலாளர் ராஜா, அருட்தந்தை சகாயராஜ் போட்டியை துவக்கி வைத்தனர்.
தேசிய நடுவர் கடலுார் டேக்வாண்டோ சங்க தலைவர் ஹரிஹரன், பொதுச் செயலாளர் ஏழுமலை, பொருளாளர் செந்தில் முருகன் சிறப்புரையாற்றினர்.
ஆண், பெண் இருபாலருக்கும், சப் ஜூனியர், சீனியர் என பல்வேறு எடை பிரிவுகளின் கீழ் போட்டி நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்ப்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு தேக்வாண்டோ பயிற்சியாளர் இளவரசன் சான்றிதழ் மற்றும் பரிசு வழங்கினார்.
ஏற்பாடுகளை செயலாளர் லோகேஷ், பொருளாளர் கோபிநாத் செய்திருந்தனர்.

