/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மாவட்டத்தில் 'லோக் அதாலத்' ரூ. 35 கோடிக்கு தீர்வு
/
மாவட்டத்தில் 'லோக் அதாலத்' ரூ. 35 கோடிக்கு தீர்வு
ADDED : செப் 15, 2024 06:53 AM

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் நேற்று நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்தில் (லோக் அதாலத்), ஒரே நாளில் 1,300 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு, 35 கோடியே 1 லட்சத்து 34 ஆயிரத்து 527 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
கடலுார் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம் (லோக் அதாலத்) மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு சட்டப் பணிகள் ஆணைக் குழு தலைவரும், மாவட்ட பொறுப்பு முதன்மை நீதிபதி விஜயக்குமார் தலைமை தாங்கினார். குடும்ப நலம் நீதிபதி வித்யா, மோட்டார் வாகன விபத்து வழக்கு முதலாவது நீதிமன்ற நீதிபதி ஆனந்தன், போக்சோ நீதிமன்ற மாவட்ட நீதிபதி லட்சுமி ரமேஷ், மக்கள் நீதிமன்ற மாவட்ட நீதிபதி பிரகாஷ், குற்றவியல் நீதிமன்ற நீதிபதி நாகராஜன், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளர் அன்வர் சாதத், மாவட்ட உரிமையியில் நீதிமன்ற நீதிபதி பத்மாவதி, மாஜிஸ்திரேட் வனஜா ஆகியோர் முன்னிலையில் வழக்குகள் விசாரணை நடத்தப்பட்டது.
இதில், மோட்டார் வாகன விபத்து வழக்குகள், சிவில் வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், தொழிலாளர் வழக்குகள், சமரசம் செய்யக்கூடிய குற்றவியல் வழக்குகள், பணமோசடி வழக்குகள், நில எடுப்பு வழக்குகள், குடும்ப நல வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சமரசம் முறையில் தீர்வு காணப்பட்டது.
கடலுார் மாவட்ட முழுவதும் நீதிமன்றங்களில் நடந்த லோக் அதாலத்தில் 12 அமர்வுகளில் 4,538 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு 1,300 வழக்குகள் முடித்து வைக்கப்பட்டது. அதில், 35 கோடியே 1 லட்சத்து 34ஆயிரத்து 527 ரூபாய்க்கு தீர்வு காணப்பட்டது.
நிகழ்ச்சியில் வக்கீல் சங்கம் நிர்வாகிகள் கிருஷ்ணசாமி, செந்தில்குமார், அமுதவள்ளி, கார்த்திகேயன் உள்ளிட்ட வக்கீல்கள், நீதிமன்ற அலுவலர்கள், காவல் துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.