/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுார் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
/
கடலுார் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
கடலுார் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
கடலுார் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
ADDED : ஏப் 16, 2024 11:06 PM

கடலுார், - கடலுார் தொகுதியை முன்மாதிரியாக மாற்றுவேன் என, தே.மு.தி.க.,வேட்பாளர் சிவக்கொழுந்து பேசினார். கடலுார் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து நல்லுார் ஒன்றியத்திற்குட்பட்ட என்.நாரையூர், லட்சுமணபுரம், பூலாம்பாடி, நிராமணி, வரம்பனுார், கண்டப்பங்குறிச்சி, திருப்பயர், மங்களூர் ஒன்றியத்தில் மா.புடையூர், மங்களூர், ம.புதுார், கொத்தனுார், ஒரங்கூர், ரெட்டாக்குறிச்சி, எஸ்.புதுார், நரையூர், சிறுபாக்கம், மாங்குளம் உட்பட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் முரசு சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பிரசாரம் செய்தார்.
அப்போது, சிவக்கொழுந்து பேசுகையில், 'அ.தி.மு.க.,-தே.மு.தி.க., கூட்டணியை மக்கள் விரும்புகின்றனர். நான் வெற்றி பெற்றதும் தொகுதி முழுதும் சுற்றுப்பயணம் செய்து, மக்களை சந்தித்து குறைகளை நிறைவேற்றுவேன். கடலுார் தொகுதியை முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன். மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றி மக்களின் நன்மதிப்பை பெறுவேன். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், வியாபாரிகள் விவசாயிகளின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவேன்' என்றார்.
தே.மு.தி.க., ஒன்றிய செயலர்கள் நல்லுார் சேகர், மங்களூர் ராஜமாணிக்கம், செல்வகுமார், அ.தி.மு.க., ஒன்றிய செயலர்கள் நல்லுார் பச்சமுத்து, மங்களூர் பாண்டியன், அ.தி.மு.க., நிர்வாகிகள் ரவிச்சந்திரன், அருளழகன், குமரேசன், தங்கவேல், சந்திரபாபு, அய்யாசாமி, குமார், ராமலிங்கம், ஜெயராமன், ராஜவேல், மணிகண்டன், தே.மு.தி.க., நிர்வாகிகள் குமரவேல், திருமால், ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.

