/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
/
தி.மு.க., செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : ஆக 27, 2024 04:25 AM
வடலுார் : வடலுாரில் தி.மு.க., குறிஞ்சிப்பாடி ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள், செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
குறிஞ்சிப்பாடி ஒன்றிய அவைத் தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர்கள் சிவக்குமார், நாராயணசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் பன்னீர்செல்வம் சிறப்புரையாற்றினார்.
வடலுார் நகர அவைத் தலைவர் சுப்புராயலு, நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி அவைத் தலைவர் ராமர், செயலாளர் சங்கர், வடலுார் சேர்மன் சிவக்குமார், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி சேர்மன் கோகிலாகுமார், பொதுக்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், இளைஞரணி, மகளிரணி உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.