/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
/
தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
தி.மு.க., கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
ADDED : மார் 25, 2024 05:45 AM

வடலுார்: வடலுாரில் தி.மு.க. தலைமையிலான இண்டியா கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மங்கையர்கரசி திருமண மண்டபத்தில் நடந்தது.
தி.மு.க., கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சரமான பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அமைச்சர் கணேசன் முன்னிலை வகித்தார். எம்.எல்.ஏ.,க்கள் கடலுார் ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், காட்டுமன்னார்கோயில் சிந்தனை செல்வன், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் இளபுகழேந்தி, துரை சரவணன், முத்துக்குமார், கலைச்செல்வன், முன்னால் எம்.பி இளங்கோவன், காங்கிரஸ் மாநிலத் துணைத் தலைவர் மணிரத்தினம்.
மாவட்ட தலைவர்கள் காங்கிரஸ் திலகர், செந்தில்நாதன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் ராமலிங்கம் ,பிச்சை, குணசேகரன் ,மா.கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் மாதவன், ஆறுமுகம் இந்திய கம்யூ., கட்சி மாவட்ட செயலாளர் துரை, மணிவாசகம் ,குலோப், வி.சி.கே. மாவட்ட செயலாளர் செந்தில், நீதி வள்ளல், அறிவுடைநம்பி, திராவிட மணி மூவேந்தர் முன்னேற்ற கழகம் மணிகண்டன்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அப்துல் ரகுமான் ரப்பானி, சுக்கூர் இஸ்மாயில் , மக்கள் நீதி மையம் விமல் ராஜ் , தி.மு.க.,குறிஞ்சிப்பாடி ஒன்றிய செயலாளர் சிவக்குமார்,கடலுார் மேயர் சுந்தரி ராஜா ,துணை மேயர் தாமரைச்செல்வன், வடலுார் நகராட்சி சேர்மன் சிவக்குமார், துணை சேர்மன் சுப்பராயலு தி.மு.க.,நகர செயலாளர் தமிழ்ச்செல்வன், குறிஞ்சிப்பாடி சேர்மன் கோகிலா குமார் துணை சேர்மன் ராமர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

