/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., கிரிக்கெட் போட்டி: அமைச்சர் பரிசு வழங்கல்
/
தி.மு.க., கிரிக்கெட் போட்டி: அமைச்சர் பரிசு வழங்கல்
தி.மு.க., கிரிக்கெட் போட்டி: அமைச்சர் பரிசு வழங்கல்
தி.மு.க., கிரிக்கெட் போட்டி: அமைச்சர் பரிசு வழங்கல்
ADDED : ஆக 13, 2024 05:53 AM

நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பத்தில் தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் நடத்தப்பட்ட கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு அமைச்சர் கணேசன் பரிசு வழங்கினார்.
நெல்லிக்குப்பத்தில் கடலூர் மேற்கு மாவட்ட தி.மு.க., விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பில் கருணாநிதியின் 101 பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. மூன்று நாட்கள் நடந்த போட்டியில் வெற்றி பெற்ற அணியினருக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் வெங்கடேசன் தலைமை தாங்கினார்.
தி.மு.க, நகர செயலாளர் மணிவண்ணன் முன்னிலை வகித்தார். தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., சேர்மன் ஜெயந்தி வாழ்த்தி பேசினர்.
முதலிடம் பிடித்த அணிக்கு 50 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை மற்றும் கோப்பையை அமைச்சர் கணேசன் வழங்கி பாராட்டினார். இரண்டாம் இடம் பிடித்த அணிக்கு பொதுக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், மூன்றாம் பரிசை முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தி, நான்காம் பரிசை மாவட்ட பிரதிநிதி வேலு, 5ம் பரிசை இளைஞரணி துணை அமைப்பாளர் ராஜா வழங்கினர். அண்ணாகிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன், பண்ருட்டி சேர்மன் ராஜேந்திரன், நகரமன்ற துணைத்தலைவர் கிரிஜா, கல்வியியல் கல்லூரி தாளாளர் ஜோசப்ஜெயராஜ், ஒருங்கிணைப்பாளர் பிரபு, விளையாட்டு மேம்பாட்டு அணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் சபா, முரளி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

