/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., மாவட்ட செயற்குழு: அமைச்சர்., எம்.எல்.ஏ., பங்கேற்பு
/
தி.மு.க., மாவட்ட செயற்குழு: அமைச்சர்., எம்.எல்.ஏ., பங்கேற்பு
தி.மு.க., மாவட்ட செயற்குழு: அமைச்சர்., எம்.எல்.ஏ., பங்கேற்பு
தி.மு.க., மாவட்ட செயற்குழு: அமைச்சர்., எம்.எல்.ஏ., பங்கேற்பு
ADDED : ஆக 18, 2024 05:39 AM

மந்தாரக்குப்பம் கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நெய்வேலி தொ.மு.ச., அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். அமைச்சர் கணசேன் பங்கேற்று பேசினர்.
மேற்கு மாவட்டத்தில் இளைஞரணி மற்றும் மகளிரணி நிர்வாகிகள் வலுசேர்க்கும் வகையில் அதிக உறுப்பினர்களை சேர்ப்பது, கருணாநிதி நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு இளைஞரணி சார்பில் பேச்சு போட்டி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராசவன்னியன், பண்ருட்டி ஒன்றிய சேர்மன் சபா பாலமுருகன், நகர செயலாளர் குருநாதன், மாவட்ட பொருளாளர் தண்டபாணி, ஒன்றிய செயலாளர்கள் பாவாடை கோவிந்தசாமி, குணசேகரன், சந்தோஷ்குமார், முன்னாள் எம்.எல்ஏ., கலைச்செல்வன், முத்துகுமார், பொதுகுழு உறுப்பினர்கள் புகழேந்தி, அறிவழகன், தொ.மு.ச., பொதுசெயலாளர் பாரி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேஷ்குமார் மற்றும் துணை அமைப்பாளர்கள், நிர்வாகிகள் பங்கேற்றனர்.