/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., பகுதி செயலாளர் இல்லத் திருமணம்
/
தி.மு.க., பகுதி செயலாளர் இல்லத் திருமணம்
ADDED : செப் 02, 2024 09:37 PM

கடலுார் : கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க., செயலாளர் இல்லத் திருமண விழாவில் மணமக்களை அமைச்சர் பன்னீர்செல்வம் வாழ்த்தினார்.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் பகுதி தி.மு.க., செயலாளர், அரசு ஒப்பந்ததாரர் சலீம்-மாநகர கவுன்சிலர் ஷாய் துன்னிசா தம்பதியர் மகன் சையத்ரியாசுத்தீன், சென்னை, திருவல்லிக்கேணி ஜமீல் அகமது-சீமாஜபின் தம்பதி மகள் ஆகிலா நர்கீஸ் திருமணம் புதுச்சேரி சுகன்யா கன்வென்ஷனில் நடந்தது.
அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, மணமக்களை வாழ்த்தினார். மணமக்கள் பெற்றோர் வரவேற்றனர். மாவட்ட தி.மு.க., பொருளாளர் கதிரவன், அய்யப்பன் எம்.எல்.ஏ., புதுச்சேரி எதிர்க்கட்சித் தலைவர் சிவா, எம்.பி., விஷ்ணு பிரசாத், செந்தில்குமார்எம்.எல்.ஏ., மாநகர மேயர் சுந்தரி ராஜா, துணைமேயர் தாமரைச்செல்வன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் அப்துல் ரகுமான் ரபானி, நெல்லிக்குப்பம் நகராட்சி சேர்மன் ஜெயந்தி ராதாகிருஷ்ணன், பேலஸ் சுமங்கலி சில்க்ஸ் உரிமையாளர் நிஷ்டர் அலி, மாநகர கவுன்சிலர் பிரகாஷ், அரசியல் கட்சி நிர்வாகிகள், தொழிலதிபர்கள், ஒப்பந்ததாரர்கள் உட்பட பலர் மணமக்களை வாழ்த்தினர்.