/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்: அமைச்சர் அழைப்பு
/
தி.மு.க., நிர்வாகிகள் கூட்டம்: அமைச்சர் அழைப்பு
ADDED : செப் 02, 2024 09:37 PM

சிறுபாக்கம் : திட்டக்குடி சட்டசபை தொகுதியில் நடக்கும் நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க தி.மு.க., மேற்கு மாவட்ட செயலர், அமைச்சர் கணேசன் அழைப்பு விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை, முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின்படி, கடலுார் மேற்கு மாவட்ட சட்டசபை தொகுதிகளில் தி.மு.க., பொது உறுப்பினர்கள் கூட்டம் நடக்கிறது.
அதன்படி, திட்டக்குடி சட்டசபை தொகுதியில், 4ம் தேதி காலை 10:00 மணியளவில் மங்களூர் தெற்கு ஒன்றியம், ஜி.வி. மஹால் மங்களூர்; பகல் 11:30 மணியளவில் மங்களூர் வடக்கு ஒன்றியம், விஷ்ணு மஹால் அடரி; பகல் 1:00 மணியளவில் மங்களூர் கிழக்கு ஒன்றியம், தனலட்சுமி திருமண மண்டபம் ஆவினங்குடி; மாலை 4:00 மணியளவில், நல்லுார் தெற்கு ஒன்றியம், சரோ ரத்தின மஹால், பெண்ணாடம் பகுதிகளில் நடக்கிறது.
இதில், திட்டக்குடி மற்றும் நெய்வேலி தொகுதிகளைச் சேர்ந்த தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி, கிளை செயலர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், தொ.மு.ச., நிர்வாகிகள் உட்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.