/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மங்களூரில் தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டம்
/
மங்களூரில் தி.மு.க., உறுப்பினர்கள் கூட்டம்
ADDED : செப் 05, 2024 07:35 PM

சிறுபாக்கம்:அமைச்சர் உதயநிதி, துணை முதல்வராக பொறுப்பேற்க, மங்களூர் ஒன்றிய தி.மு.க., கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
சிறுபாக்கம் அடுத்த மங்களூரில் தி.மு.க., தெற்கு ஒன்றிய பொது உறுப்பினர்கள் கூட்டம் நடந்தது. ஒன்றிய செயலாளர் செங்குட்டுவன் தலைமை தாங்கினார். ஒன்றிய சேர்மன் சுகுணா சங்கர், திட்டக்குடி தொகுதி பொறுப்பாளர் செந்தமிழ்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர். அமைச்சர் கணேசன் பங்கேற்று பேசினார்.
தி.மு.க., நிர்வாகிகள் ராமச்சந்திரன், சேகர், திருவள்ளுவன், குமணன், ராஜசேகர், ஊராட்சி தலைவர்கள் தேவராஜ், ராமு உட்பட பலர் பங்கேற்றனர்.
கூட்டத்தில், அமைச்சர் உதயநிதி துணை முதல்வராக பொறுப்பேற்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.