தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்

தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்


ADDED : செப் 16, 2024 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 16, 2024 05:20 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிள்ளை, : சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சியில், பரங்கிப்பேட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில், இளைஞரணி மற்றும் மகளிரணி உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.

ஒன்றிய செயலாளர் கலையரசன் தலைமை தாங்கினார். சேர்மன் கருணாநிதி, ஒன்றிய அவைத் தலைவர் நல்லதம்பி, துணை செயலாளர்கள் பொன்னுசாமி, சதா இளவரசு, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர் அணி சுப்பு வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இளைஞரணி மற்றும் மகளிரணி உறுப்பினர் சேர்க்கை முகாமை, தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன் துவக்கி வைத்தார்.

முகாமில், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அப்பு சத்தியநாராயணன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கணைப்பாளர் ராகவன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் பிரபு, ஒன்றிய கவுன்சிலர்கள் மோகன்தாஸ், ஜெயந்தி சாமிதுரை, நிர்வாகிகள் முத்துவேல், அன்புசெல்வன், திருமாறன், அப்துல் சலீம், காதர் மஸ்தான் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us