ADDED : ஏப் 20, 2024 05:39 AM
விருத்தாசலம், : விருத்தாசலம் நகராட்சி அலுவலகத்திற்கு பின்புறம் உள்ள நகராட்சி துவக்கப் பள்ளியில், 263, 265 என இரண்டு ஓட்டுச்சாவடிகள் உள்ளன.
நேற்று காலை 7:00 மணி முதல் ஓட்டுப்பதிவு துவங்கிய நிலையில், ஓட்டுச்சாவடிக்கு வெளியே தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளின் நிர்வாகிகள் திரண்டு, வாக்காளர்களிடம் ஓட்டு சேகரித்தனர். காலை 8:30 மணியளவில், வாக்கா ளர்கள் சிலரை அ.தி.மு.க., வினர் ஓட்டுச்சாவடி வரை அழைத்துச் சென்று, முரசு சின்னத்திற்கு ஓட்டுபோடுமாறு கூறியதாக தெரிகிறது.
ஆத்திரமடைந்த தி.மு.க., நகர செயலாளர் தண்டபாணி உள்ளிட்ட நிர்வாகிகள், அ.தி.மு.க.,வி னரை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கிருந்த போலீசார் இருதரப்பு நிர்வாகிகளையும் எச்சரித்து, அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
