/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
என்.எல்.சி.,யால் பாதித்த மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
/
என்.எல்.சி.,யால் பாதித்த மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
என்.எல்.சி.,யால் பாதித்த மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
என்.எல்.சி.,யால் பாதித்த மக்களுக்கு ஆதரவாக இருப்பேன் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து உறுதி
ADDED : ஏப் 06, 2024 05:47 AM

விருத்தாசலம்: கடலுார் தொகுதியில் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து, கம்மாபுரம் தெற்கு, வடக்கு மற்றும் விருத்தாசலம் வடக்கு ஒன்றிய ஊராட்சிகளில் நேற்று ஓட்டு சேகரித்தார். அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., தலைமையில் முடப்புளி, நடியப்பட்டு, இருளக்குறிச்சி, மணக்கொல்லை, ஆலடி, புலியூர் உட்பட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் வேட்பாளர் சிவக்கொழுந்து ஓட்டு சேகரித்தார்.
அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ., பேசுகையில், 'அ.தி.மு.க., ஆட்சியில் செயல்படுத்திய மக்கள் நலத் திட்டங்களை விடியா தி.மு.க., அரசு நிறுத்திவிட்டது. காங்., வேட்பாளர் விஷ்ணுபிரசாத் பணத்தை வாரி இறைப்பார். ஆனால், நமது வேட்பாளர் சிவக்கொழுந்து ஏழை, நல்ல மனிதர், அவரை வெற்றி பெறச் செய்ய முரசு சின்னத்தில் ஓட்டுப் போடுங்கள்' என்றார்.
வேட்பாளர் சிவக்கொழுந்து கூறுகையில், 'என்.எல்.சி., நிர்வாகத்தால் பாதித்த மக்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பேன். மாவட்டத்தில் விவசாயிகள் வளம்பெறும் வகையில் திட்டங்களை செயல்படுத்துவேன் என்றார்.
தொகுதி பொறுப்பாளர்கள் ரவிச்சந்திரன், அருளழகன், ஒன்றிய செயலாளர்கள் சின்னரகுராமன், வேல்முருகன், நிர்வாகிகள் ரமேஷ், மணி, ராஜரத்தினம், அரங்கநாதன், பாலமுருகன், துணை செயலாளர் தினேஷ்குமார், இணை செயலாளர் பிரபாகரன், மாணவரணி இணை செயலாளர் தேவ பிரசாத், அவைத் தலைவர் கருணாகரன், முருகன், கூட்டுறவு சங்கத் தலைவர் சுப்ரமணியன் மற்றும் தே.மு.தி.க., ஒன்றிய செயலாளர்கள் பொன்தனசேகர், ஜெயக்குமார், மாநில துணை பொதுச் செயலாளர் வேல்முருகன், மாவட்ட பொருளாளர் ராஜ், நகர செயலாளர் ராஜ்குமார், நகர தலைவர் சங்கர், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் ஜானகிராமன், டைலர் பாலமுருகன், ஒன்றிய நிர்வாகிகள் ஜெயராஜ், செல்வக்குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.

