ADDED : செப் 07, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி: கீரப்பாளையம் அடுத்த வீரசோழகன் ஊராட்சி ராமச்சந்திரா அவன்யூ பகுதியில் மழை நீர் வடிகால் குறித்து டி.ஆர்.ஓ., ஆய்வு செய்தார்.
கீரப்பாளையம் ஒன்றியம், வீரசோழகன் ஊராட்சிக்குட்பட்ட நகர் பகுதியில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியது. வடிகால் வசதி தேவை என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன் பேரில் நேற்று முன்தினம் ராமச்சந்திரா நகர் பகுதியில் மழைநீர் வடிகால் அமைப்பது குறித்து டி.ஆர்.ஓ., ராஜசேகர் நேரில் ஆய்வு செய்தார்.
தாசில்தார் ஹேமாஆனந்தி, தலைமை நில அளவையர் சந்திரகாசன், மண்டல தாசில்தார் புஷ்பராஜ், கிராம நிர்வாக அலுவலர் பாரதி உடனிருந்தனர்.