/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
சிதம்பரத்தில் 2 இடங்களில் மினி டேங்குடன் குடிநீர் வசதி
/
சிதம்பரத்தில் 2 இடங்களில் மினி டேங்குடன் குடிநீர் வசதி
சிதம்பரத்தில் 2 இடங்களில் மினி டேங்குடன் குடிநீர் வசதி
சிதம்பரத்தில் 2 இடங்களில் மினி டேங்குடன் குடிநீர் வசதி
ADDED : ஆக 08, 2024 11:47 PM

சிதம்பரம்: சிதம்பரம் நகராட்சி பகுதியில் இரு இடங்களில், மினி டேங்குடன் கூடிய புதிய குடிநீர் மோட்டாரை நகராட்சி சேர்மன் செந்தில்குமார் இயக்கி வைத்தார்.
சிதம்பரம் நகராட்சியில் சின்ன செட்டிதெரு, பெரிய காஜியார் தெரு ஆகிய இரு இடங்களில், குடிநீர் பற்றாக்குறை இருந்தது. அதை சரி செய்யும் வகையில், ரூ. 4.50 லட்சம் செலவில் மினி குடிநீர் டேங்குடன், மோட்டார் பம்ப் அமைக்கப்பட்டது. அதனை, சேர்மன் செந்தில்குமார் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மாவட்ட திட்டக்குழு செயலாளர் கவுன்சிலர் ஜேம்ஸ் விஜயராகவன், மாவட்ட பொறியாளர் அணி அப்பு சந்திரசேகரன், நகர துணை தலைவர்கள் பாலசுப்பிரமணியன், இளங்கோவன், கவுன்சிலர் மணிகண்டன், வார்டு செயலாளர் வேலு, ஆறுமுகம் , தென்னவன் முருகன், ரவி, மகளிரணி சத்யா, பானு, தொழில்நுட்ப பிரிவு ஸ்ரீதர், வெங்கடேசன் , கிருஷ்ணமூர்த்தி, அருள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்