/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மனு
/
குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மனு
குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மனு
குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மனு
ADDED : ஜூலை 23, 2024 12:02 AM

கடலுார் : மாத ஊதியத்துடன் அகவிலை படி கணக்கீடு செய்து, புதிய ஊதிய உத்தரவு மற்றும் அதற்கான நிலுவை தொகைக்கோரி, கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.
தமிழ்நாடு ஊராட்சி குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குபவர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் கொடுத்துள்ள மனு:
கடலுார் மாவட்டத்தில் உள்ள 683 கிராம ஊராட்சிகளில் குடிநீர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி மற்றும் மின் மோட்டார் இயக்குபவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். ஏழாவது ஊதிய குழு பரிந்துரைப்படி திருவண்ணாமலை மாவட்டத்தில் மாத ஊதியத்துடன் அகவிலை படி கணக்கீடு செய்து, புதிய ஊதிய உத்தரவு மற்றும் அதற்கான நிலுவை தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று, கடலுார் மாவட்டத்திலும் வழங்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.