தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ லாரி மீது மரம் விழுந்ததில் டிரைவர் உயிர் தப்பினார்  

லாரி மீது மரம் விழுந்ததில் டிரைவர் உயிர் தப்பினார்  

லாரி மீது மரம் விழுந்ததில் டிரைவர் உயிர் தப்பினார்  


ADDED : மே 11, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 11, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கடலுார்: கடலுாரில் கண்டெய்னர் லாரி மீது மரம் விழுந்ததில் டிரைவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். 

கடலுாரில் இருந்து கேப்பர்மலை வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு தகுதி சான்றிதழ் பெற நேற்று காலை கண்டெய்னர் லாரி சென்று கொண்டிருந்தது. லாரியை புதுச்சேரி, கதிர்காமம் பகுதியைச் சேர்ந்த சிவராமன், 50; ஓட்டினார். 

வண்டிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி அருகில் லாரி வந்து போது, சாலையோரம் இருந்த பழமையான சிவப்பு கொண்டல் மரம் கடந்த 2 நாட்களாக மழையில் நனைந்த நிலையில், திடீரென வேருடன் லாரியின் முன்பகுதி மீது விழுந்தது. அப்போது, லாரி டிரைவர் உடனடியாக கிழே இறங்கி, அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். லாரியின் முன்பகுதி சேதமானது. மரம் மின் ஒயர் மீது விழுந்ததால் அப்பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இது குறித்து தகவலறிந்த கடலுார் தீயணைப்பு சிறப்பு நிலைய அலுவலர் வைத்தியநான் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மரத்தை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். 

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us