ADDED : ஜூலை 17, 2024 12:33 AM
நெல்லிக்குப்பம் முள்ளிகிராம்பட்டையொட்டி, பெண்ணையாற்றின் நடுபகுதி வரை புதுச்சேரி மாநில பகுதி உள்ளதால், ஆற்றின் நடுவே அம்மாநில சாராயக்கடை செயல்படுகிறது. இங்கு, தமிழக குடிபிரியர்களே அதிகம் செல்கின்றனர். இவர்கள், புல் போதையில் முள்ளிகிராம்பட்டு வழியே வரும்போது தகராறில் ஈடுபடுகின்றனர். வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.
இதனால், சாராயக்கடைக்கு செல்லும் வழியை மூட வேண்டுமென கவுன்சிலர் ஸ்ரீதர், போலீசார் மற்றும் வருவாய் துறையிடம் முறையிட்டார்.
ஆனாலும் நடவடிக்கை இல்லாத நிலையில், கலெக்டர் அருண்தம்புராஜ் உத்தரவின்பேரில் போலீசார் தமிழக எல்லையில் இருந்து அந்த சாராயக்கடைக்கு செல்லும் வழியில் பொக்லைன் இயந்திரம் மூலம் பள்ளம் தோண்டி வழியை துண்டித்தனர்.
அடிக்கடி இதுபோன்ற சாலைய துண்டித்தும், குடிப்பிரியர்கள் அடங்காமல், வழியை மூடிவிடுகின்றனர். பலமுறை வழியை துண்டித்தும் நிரந்தர தீர்வு இதுவரை இல்லை.