/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு உறுதி மொழி
/
கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு உறுதி மொழி
ADDED : ஜூன் 26, 2024 11:18 PM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் எம்.ஜி.ஆர்., அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி போதை பொருள் ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரியின் போதைப் பொருள் தடுப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் பேராசியர் சரவணன் வரவேற்றார். முதல்வர் மீனா தலைமை தாங்கி மாணவர்களுக்கு போதை பொருள் பயன்பாட்டினால் ஏற்படும் தீமைகள் மற்றும் போதைப் பொருட்கள் பயன்படுத்துவர்களை மீட்க மாணவர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து விளக்கம் அளித்தார்.
துறை தலைவர்கள் பூபாலன், செந்தில்குமார், தேவநாதன், நூலகர் நடராஜன், பேராசிரியர்கள் ராமச்சந்திரன், நாகராஜ், ராஜ்குமார், ஜோதி, சுப்புலட்சுமி, சுபா லட்சுமி மற்றும் அலுவலக பணியாளர்கள் அறிவழகன், தர்மராஜ், வேல்முருகன் உட்பட பலர் பங்கேற்றனர். முன்னதாக போதை பழக்கத்திற்கு எதிராக, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உறுதி மொழி ஏற்றனர்.
தமிழ் துறை தலைவர் சிற்றரசு நன்றி கூறினார்.