/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கலைமகள் பள்ளியில் போதை விழிப்புணர்வு
/
கலைமகள் பள்ளியில் போதை விழிப்புணர்வு
ADDED : ஆக 25, 2024 11:54 PM

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் கலைமகள் மெட்ரிக் பள்ளியில். காஸ்மோ பாலிட்டன் லயன்ஸ் சங்கம் சார்பில், போதை ஓழிப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
பேரணிக்கு, பள்ளி நிறுவனர் முத்துக்குமரன் தலைமை தாங்கினார். தாளாளர் பரணிதரன், செயலாளர் பாலாராவாயன் முன்னிலை வகித்தனர். முதல்வர் சஞ்சய்காந்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக இன்ஸ்பெக்டர் ரேவதி, சப் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
பேரணியில் மாணவர்கள் போதைக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஏந்தி, நகரின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
பேரணியில், காஸ்மோ பாலிட்டன் அரிமா சங்க தலைவர் ரமேஷ்குமார், செயலாளர் வித்யாசாகர் மற்றும் ரவிச்சந்திரன், முகம்மது யூசுப், கதிர், சம்பந்தம் மற்றும் மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
பள்ளி துணை முதல்வர் நன்றி கூறினார்.

