/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
/
போதை விழிப்புணர்வு மாரத்தான் போட்டி
ADDED : மார் 05, 2025 05:03 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திட்டக்குடி: திட்டக்குடி ரோட்டரி சங்கம் சார்பில் 'போதை இல்லா உலகம்' மாரத்தான் போட்டி நடந்தது.
திட்டக்குடி ரோட்டரி சங்க தலைவர் சிவகிருபா தலைமை தாங்கினார். மாவட்ட துணை ஆளுநர் தாசன், நகராட்சி ஆணையர் முரளிதரன், சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ், டாக்டர் கொளஞ்சிநாதன் முன்னிலை வகித்தனர். நிர்வாகி மணிவண்ணன் வரவேற்றார்.
பெண்ணாடத்தில் துவங்கிய போட்டியில் 12 வயது முதல் 65 வயது வரையிலான 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். போட்டியில் வென்றவர்களை திட்டக்குடி டி.எஸ்.பி., மோகன் பாராட்டி பரிசு, சான்றிதழ் வழங்கினார். ரோட்டரி சங்க நிர்வாகி வேல்முருகன் நன்றி கூறினார்.