/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
போதை பொருள் விற்பனை தடுக்கப்படும்: டி.எஸ்.பி., ராஜா
/
போதை பொருள் விற்பனை தடுக்கப்படும்: டி.எஸ்.பி., ராஜா
போதை பொருள் விற்பனை தடுக்கப்படும்: டி.எஸ்.பி., ராஜா
போதை பொருள் விற்பனை தடுக்கப்படும்: டி.எஸ்.பி., ராஜா
ADDED : ஆக 29, 2024 11:08 PM
பண்ருட்டி: பண்ருட்டியில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை குறித்து, தகவல் தெரிவிக்கலாம் என, டி.எஸ்.பி., ராஜா கேட்டுக்கொண்டுள்ளார்.
பண்ருட்டி புதிய டி.ஸ்.பி.,யாக ராஜா பொறுப்பேற்றுள்ளார். அவர் கூறுகையில், பண்ருட்டியில் லாட்டரி சீட்டு விற்பனை அதிகமாக உள்ளதாக வந்த தகவலின்பேரில், நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா, ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் முழுமையாக தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
சட்டம் ஒழுங்கு பிரச்சனை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை, ரவுடிசம் குறித்து பொதுமக்கள் நேரடியாக எனது மொபைல் எண் 94982 32644 ல் தகவல் தெரிவிக்கலாம்.
தகவல் கூறுவோர் குறித்து ரகசியம் காக்கப்படும். நகரில் போக்குவரத்து போலீசார் மூலம் முக்கிய வீதிகளில் உள்ள போக்குவரத்து சீர்கேடுகள் களையப்படும் என்றார்.