/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
பதவிகள் முடிவதால் ஊராட்சிகளில் தாராளம்
/
பதவிகள் முடிவதால் ஊராட்சிகளில் தாராளம்
ADDED : செப் 11, 2024 12:18 AM
மாவட்டத்தின் கடைக்கோடியிலுள்ள மங்களூர் ஒன்றியத்தில் 66 ஊராட்சிகள், 30 துணை கிராமங்கள் உள்ளன.
இங்கு, ஆண்டுதோறும் ஊராட்சிகளின் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற புதிய திட்டப்பணிகள், அங்கன்வாடி, அரசு பள்ளி கட்டடங்கள், புதிய தார்சாலை, தனிநபர் கழிவறை, கான்கிரீட் வீடுகள் உள்ளிட்ட பணிகளுக்கு கோடி கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
தற்போது, உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிய சில மாதங்கள் உள்ளதால், வளர்ச்சி திட்டப்பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யும் நிதிகளை ஊராட்சி தலைவர்கள் தாராளமாக செலவு செய்து வருகின்றனர். விரைவில் ஒதுக்கீடு செய்தபணத்தை காலி செய்கின்றனர்.
இதனை அதிகாரிகள் ஆய்வு செய்ததில், பல்வேறு செலவீனங்களை கணக்கு காட்டுகின்றனர். வளர்ச்சி திட்டப்பணிகளுக்கான நிதி விரைவில் காலியாவதால், நாம ஏதாவது சிக்கலில் சிக்கிவிடுவோமா என, ஒன்றிய அதிகாரிகள் புலம்பி வருகின்றனர்.

