ADDED : ஜூன் 13, 2024 05:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம், : விருத்தாசலம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில், இன்று மின்நுகர்வோர் குறைதீர்ப்பு நாள் நடக்கிறது.
விருத்தாசலம் கோட்ட செயற்பொறியாளர் சுகன்யா செய்திக்குறிப்பு:
விருத்தாசலம் பூதாமூரில் உள்ள செயற்பொறியாளர் அலுவலகத்தில் இன்று மாலை 3:00 முதல் 5:00 மணி வரை குறைதீர்ப்பு நாள் கூட்டம் நடக்கிறது. இதில், விருத்தாசலம் மின் கோட்டத்தில் உள்ள விருத்தாசலம் நகரம், ஊரகம், கோ.பூவனுார், கருவேப்பிலங்குறிச்சி உபகோட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நுகர்வோர் தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.