/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
மணவாள மாமுனிகள் கோவிலில்ஈடு உற்சவம்
/
மணவாள மாமுனிகள் கோவிலில்ஈடு உற்சவம்
ADDED : ஜூன் 11, 2024 06:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் ஆனித் திருமூல ஈடு மகோற்சவம் 18ம் தேதி துவங்குகிறது.
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் கோவிலில் ஆனித் திருமூல ஈடு மகோற்சவம் வரும் 18ம் தேதி துவங்கி 22ம் தேதி வரை நடக்கிறது. இதனை முன்னிட்டு தினமும் திருமஞ்சனம், கோவில் உள் புறப்பாடு நடக்கிறது.
வரும் 22ம் தேதி காலை 8:00 மணிக்கு வீதியுலா, 11:00 மணிக்கு திருமஞ்சனம், மாலை 6:00 மணிக்கு தங்க சேஷ வாகனத்தில் புறப்பாடு, 8:00 மணிக்கு திருவாய்மொழி சேவை, 9:00 மணிக்கு ஈடு சாற்றுமுறை நடக்கிறது.