தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கல்வி உதவித் தொகை

கல்வி உதவித் தொகை

கல்வி உதவித் தொகை


ADDED : ஜூலை 23, 2024 02:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2024 02:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிதம்பரம் : சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழத்தில் பழங்குடியின மருத்துவ மாணவிக்கு கல்வி உதவி தொகையை துணைவேந்தர் கதிரேசன் வழங்கினார்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் மற்றும் இந்தியா டீம் - சியாட்டில் குழு, அமெரிக்கா சார்பில் பழங்குடியின மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் 18 பழங்குடி மாணவிகளுக்கு 6.25 லட்சம் ரூபாய் கல்வி உதவித் தொகை, பழங்குடியின பள்ளி மேம்பாட்டிற்காக 9 லட்சம் நிதி வழங்கப்பட்டுள்ளது. 201 மாணவிகளுக்கு கணினி பயிற்சிக்காக 8.75 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கன்னியாகுமரி மாவட்டம், புறாவிளைமலை கிராமத்தை சேர்ந்த ராமகிருஷ்ணா மருத்துவக் கல்லூரியில் இயற்கை மற்றும் யோகா இரண்டாம் ஆண்டு படிக்கும் பழங்குடியின மாணவி சபினாவிற்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இதற்கான ஆணையை பல்கலைக்கழக துணைவேந்தர் கதிரேசன் வழங்கினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us