ADDED : ஆக 11, 2024 06:04 AM

அ நிறம் | அளவு
சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு தமிழ்மன்றம் அறக்கட்டளை சார்பில் சுற்றியுள்ள கிளாங்காடு, சென்னிநத்தம், சக்திவிளாகம், சி.சாத்தமங்கலம் ஆகிய நான்கு பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் சுவர் கடிகாரங்கள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அறக்கட்டளை நிறுவனர் எழுத்தாளர் ஆணைவாரி ஆனந்தன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிறுவன நிதி அறங்காவலர் தாமரைச்செல்வன், ஒருங்கிணைப்பாளர்கள் ராஜசேகர், கோபிநாதன் ஆகியோர் சென்று அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் முன்னிலையில் கல்வி உபகரணங்கள் மற்றும் சுவர் கடிகாரங்களை வழங்கினர்.
