ADDED : ஜூன் 14, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பண்ருட்டி: பண்ருட்டி அருகே வயிற்றுவலி காரணமாக, முதியவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி அடுத்த எம்.ஏரிப்பாளையம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி,78; இவருக்கு அடிக்கடி வயிற்றுவலி ஏற்பட்டு வந்தது. கடந்த 9ம் தேதி வயிற்று வலி அதிகமானதால் விஷம் குடித்தார். கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று இறந்தார்.
பண்ருட்டி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.