ADDED : ஆக 06, 2024 07:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விருத்தாசலம் : விருத்தாசலம் அடுத்த தர்மநல்லுாரை சேர்ந்தவர்கள் வடிவேல் மகன் அருள் வீரபாண்டியன், 42. ஜெயக்குமார் மகன் நிர்மல்குமார். முன்விரோதம் காரணமாக 2 நாட்களுக்கு முன் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டது.
அதில், நிர்மல்குமார், சகோதரர் நிதிஷ்குமார், தந்தை ஜெயக்குமார், தாய் செல்வராணி ஆகியோர் சேர்ந்து அருள்பாண்டியனை தாக்கினர். தடுக்க முயன்ற அவரது தந்தை வடிவேல், 70, என்பவரையும் தாக்கினர். அதில் மயங்கி விழுந்த வடிவேல் இறந்தார்.
இதுகுறித்து அருள் வீரபாண்டியன் புகாரின் பேரில், கம்மாபுரம் போலீசார் வழக்கு பதிந்து ஜெயக்குமார்,53; செல்வராணி,47; ஆகியோரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள நிர்மல்குமார், நிதிஷ்குமாரை தேடி வருகின்றனர்.