/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கும்பலில் கார் மோதியதில் மூதாட்டி பலி: 4 பேர் காயம்
/
கும்பலில் கார் மோதியதில் மூதாட்டி பலி: 4 பேர் காயம்
கும்பலில் கார் மோதியதில் மூதாட்டி பலி: 4 பேர் காயம்
கும்பலில் கார் மோதியதில் மூதாட்டி பலி: 4 பேர் காயம்
ADDED : ஆக 23, 2024 12:28 AM
நெல்லிக்கப்பம் : சாலை ஓரத்தில் அமர்ந்திருந்தவர்கள் மீது கார் மோதியதில் மூதாட்டி இறந்தார். 4 பேர் படுகாயமடைந்தனர்.
கடலுார் அடுத்த பல்லவராயநத்தம் ஊராட்சிக்கு உட்பட்ட தொட்டி கிராமத்தில் நேற்று நுாறு நாள் வேலை திட்டத்தில் 100 பெண்கள் வாய்க்கால் துார் வாரும் பணியில் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் மதியம் உணவு இடைவேளையில் சாலையோரம் இருந்த மரத்தின் நிழலில் கும்பலாக உட்கார்ந்திருந்தனர்.
அப்போது, பண்ருட்டியில் இருந்து கடலூர் நோக்கி சென்ற கார், சாலையின் குறுக்கே ஓடியவர் மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது, கட்டுப்பாட்டை இழந்து, மரத்தின் நிழலில் உட்கார்ந்திருந்தவர்கள் மீது மோதியது.
இதில் குயிலாப்பாளையத்தை சேர்ந்த தண்டபாணி மனைவி தனலட்சுமி,65; சம்பவ இடத்திலேயே இறந்தார். மேலும், அதேபகுதியை சேர்ந்த குப்பு,50; அழகம்மாள்,60; தேவா,48; சுப்புராயன்,65; ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை சக தொழிலாளர்கள் மீட்டு, கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

