ADDED : ஏப் 03, 2024 03:13 AM
அ நிறம் | அளவு
விருத்தாசலம் : லோக்சபா தேர்தலில் நுாறு சதவீத ஓட்டு பதிவை வலியுறுத்தி, விருத்தாசலம் வாசவி கிளப் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊர்வலத்தை ஆர்.டி.ஓ., சையத் மெஹ்மூத் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தாசில்தார் உதயகுமார், சப் இன்ஸ்பெக்டர் அய்யனார் மற்றும் வாசவி கிளப் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர். ஊர்வலத்தில் 100 சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, முக்கிய வீதிகளின் வழியாக விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.
