/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
ராட்சத பலுான் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
/
ராட்சத பலுான் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
ADDED : மார் 29, 2024 05:38 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடலுார்: நடைபெற உள்ள லோக்சபா தேர்தலில் 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ராட்சத பலுானை மாவட்ட தேர்தல் அதிகாரி பறக்கவிட்டார்.
லோக்சபா முதற்கட்ட தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடக்கிறது. அதையொட்டி அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்பதற்காக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாவட்ட தேர்தல் அதிகாரி மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ராட்சத பலுானை பறக்கவிட்டார்.
உடன் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், மாநகராட்சி ஆணையர் காந்திராஜ், மகளிர் திட்ட இயக்குனர் ஸ்ருதி, மாவட்ட சமூக நல அலுவலர் கோமதி ஆகியோர் உள்ளனர்.

