/
உள்ளூர் செய்திகள்
/
கடலூர்
/
கடலுாரில் தேர்தல் திருவிழா விழிப்புணர்வு மனித சங்கிலி
/
கடலுாரில் தேர்தல் திருவிழா விழிப்புணர்வு மனித சங்கிலி
கடலுாரில் தேர்தல் திருவிழா விழிப்புணர்வு மனித சங்கிலி
கடலுாரில் தேர்தல் திருவிழா விழிப்புணர்வு மனித சங்கிலி
ADDED : ஏப் 06, 2024 06:04 AM

கடலுார், : கடலுாரில் மாநகராட்சி சார்பில் தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்ச்சி நடந்தது.
லோக்சபா பொதுத் தேர்தல்-2024 நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவு குறித்த வாக்காளர்கள் விழிப்புணர்வு மாவட்ட நிர்வாகம் சார்பில் தினம் பல்வேறு நிகழ்ச்சிகளாக நடக்கிறது.
நேற்று கடலுார் மாநகராட்சி சார்பில் நுாறு சதவீதம் ஓட்டுப் பதிவை வலியுறுத்தி பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மனித சங்கிலி நிகழ்ச்சி பாரதி ரோட்டில் நடந்தது.
மனித சங்கிலியை கலெக்டர் அருண்தம்புராஜ் துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ராஜசேகரன், கமிஷனர் காந்திராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அதேபோல் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சி அண்ணாகிராமத்தில் யூனியன் அலுவலர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் ஊர்வலம், மூத்த குடிமக்களுக்கு பொன்னாடை அணிவித்து தேர்தல் திருவிழா அழைப்பிதழ் வழங்கப்பட்டன.
பண்ருட்டி ஜான்டூவி கலைக் கல்லுாரியில் மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள், ஆசிரியர்கள் விழிப்புணர்வு கோலம் போடுதல், பண்ருட்டி நான்கு முனை சந்திப்பில் விழிப்புணர்வு ராட்சஷ பலுான் பறக்க விடுதல் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலெக்டர் அருண்தம்புராஜ் பங்கேற்றார்.

