
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடுவீரப்பட்டு: கடலுார் மாவட்ட 14 வது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட தேர்தல் பண்ருட்டியில் நடந்தது.
ஆணையாளர்களாக மயிலாடுதுறை மாவட்ட பொருளாளர் ராஜம், மாவட்ட செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தேர்தலை நடத்தினர்.
மாவட்ட தலைவராக தங்கத்தம்பி, மாவட்ட செயலாளராக சாந்தகுமார், பொருளாளராக மைதிலி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். துணைத் தலைவர்களாக முருகதாஸ், மகாலட்சுமி ஜெய திருசங்கு, மாவட்ட துணை செயலாளர்களாக நாராயணமூர்த்தி, வெங்கடாசலம், அனார்கலி, பள்ளி மாவட்ட தலைவர்களாக முரளி, குருராஜன், கல்வி மாவட்ட செயலாளர்களாக ராயப்பன் சீனிவாசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மாநில செயலாளர் கிரிஸ்டோபர், மாநில பொருளாளர் ஜீவானந்தம், முன்னாள் மாவட்ட நிர்வாகிகள் அறிவழகன், சிற்றரசன், சிவசுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர்.