ADDED : செப் 02, 2024 01:06 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புவனகிரி : புவனகிரி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், பள்ளி மேலாண்மை குழுவின் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
பள்ளி வளாகத்தில் பள்ளி மேலாண்மை குழுக் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர் சத்தியநாராயணன் தலைமை தாங்கினார். சிறப்பு பார்வையாளராக சி.முட்லுார் அரசு மேல் நிலைப்பள்ளி ஆசிரியை சாந்தி பங்கேற்றார்.
புதிய மேலாண்மை குழு தலைவராக ஷர்மிளா, துணைத் தலைவராக ஜான்பீவி ஆகியோருடன், கவுன்சிலர்கள் சண்முகம், சரஸ்வதி, ஜெகன் உட்பட 24 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கூட்டத்தில் மாணவர்களின் இடைநிற்றலை தடுப்பது, கற்றல் திறன் மேம்பாடு பிரச்னையில் சிறப்பு கவனம் செலுத்துவது, மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.