ADDED : ஜூலை 01, 2024 06:25 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பத்தில் லாரி மோதியதில் மின்கம்பம் உடைந்ததால் மின் விநியோகம் பாதித்தது.
நெல்லிக்குப்பம் தமிழ் கருமார தெருவில் சாலையோரம் மின்கம்பங்கள் உள்ளன.நேற்று அந்த வழியாக வந்த லாரி எதிரே வந்த பைக்குக்கு வழிவிடுவதற்காக சாலையோரம் சென்றது.
அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் லாரி மோதியது.
இதில் மின்கம்பம் முறிந்து சேதமானது. மின்கம்பிகள் அறுந்து விழாததால் பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. விபத்து காரணமாக அந்த பகுதியில் மின் விநியோகம் பாதித்தது.
தகவலறிந்த மின் ஊழியர்கள் 5 மணி நேரத்தில் உடைந்த மின்கம்பத்தை அகற்றி விட்டு புதிய மின்கம்பம் அமைத்து மின் விநியோகம் செய்தனர்.